ACTIVITIES AND ADSSELANGOR

துங்கு துன் ஊடா நூலகத்திற்கு சுல்தான் 2,080 நூல்கள் அன்பளிப்பு

ஷா ஆலம், ஜன 2, சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் துங்கு துன் ஊடா நூலகத்திற்கு இதுவரை 2,080 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட அந்த  நூலகம்  சுல்தானின் இதயத்திற்கு நெருக்கமான இடமாக எப்போதும் இருந்து வந்துள்ளது என்று அரச அலுவகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அந்த நூலகம் நுலகத்தின் ஆகக்கடைசி நிலவரங்களை சுல்தான் அவ்வப்போது கேட்டறிந்து வருவதோடு மக்களின் அறிவை வளர்க்கும் மையமாக அந்த நூலகம்  எப்போதும் விளங்குவதை உறுதி செய்வதற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவார் எனவும்  முகநூல் வழி வெளியிட்டப்பட்ட அந்த அறிக்கை தெரிவித்தது.

அண்மையில்  சுல்தானும் அவரது புதல்வர் ராஜா மூடா  துங்கு அமிர் ஷாவும்  அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தனர். அந்த வருகையின் போது தாங்கள் அன்பளிப்பாக வழங்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் நான்காவது மாடியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இந்த பயணத்தின் போது சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து சுல்தானுக்கு விளக்கமளித்தார்.

ஒரு லட்சத்து 35ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த நூலகத்திற்கு  இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை  73 லட்சத்து 40ஆயிம் பேர் வருகை புரிந்துள்ளதோடு 12 லட்சத்து 80 ஆயிரம் புத்தகங்களை இரவலாகப் பெற்றுள்ளனர்.

 

 


Pengarang :