NATIONALPBTSELANGOR

சிலாங்கூரில் இரு வாரங்களில் 12,866 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 19- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த இரு வாரங்களில் 12,866 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இச்சம்பவங்கள் பதிவானதாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு கூறியது.

கிள்ளான் மாவட்டம் தொடர்ந்து அதிக கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்து வருகிறது. கடந்த 14 நாட்களில்  அதிகப்பட்சமாக 4,849 சம்பவங்கள் அம்மாவட்டத்தில் கண்டறியப் பட்டுள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் உலு லங்காட் மாவட்டம் (2,363), பெட்டாலிங் மாவட்டம் (2,267), சிப்பாங் மாவட்டம் (1,109), கோம்பாக் மாவட்டம் (1,038) ஆகியவை நான்கு இலக்க கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கோல லங்காட் மாவட்டத்தில் 683 சம்பவங்களும் கோல சிலாங்கூரில் 379 சம்பவங்களும் உலு சிலாங்கூரில் 130 சம்பவங்களும் சபாக் பெர்ணத்தில் 48 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று சிலாங்கூரில் புதிதாக 1,213 கோவிட்-19 சம்பவங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில் 552 சம்பவங்கள் தொற்று மையங்கள் மூலம் பரவியவையாகும். 360 சம்பவங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையிலும் 300 சம்பவங்கள் இதர சோதனை நடவடிக்கைகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் ஒரு சம்பவம் வெளிநாட்டு இறக்குமதியாகும் என்று அந்த பணிக்குழு தெரிவித்தது.

 


Pengarang :