ri
NATIONALPBTSELANGOR

கோவிட்-19 நோயாளிகளை மேப்ஸ் மையத்திற்கு கொண்டுச் செல்ல 10 பஸ்கள் பயன்படுத்தப்படும்

ஷா ஆலம், ஜன 21– நோய்த் தாக்கம் குறைவாக உள்ள கோவிட்-19
நோயாளிகளை செர்டாங், மலேசிய விவசாய பல்கலைக்கழக கண்காட்சி
பூங்காவிற்கு (மேப்ஸ்) கொண்டுச் செல்வதற்கு 10 ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்கள்
பயன்படுத்தப்படும்.

அந்த பஸ்கள் கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்கு
கொண்டுச் செல்வதற்கு மட்டும் விஷேமாக பயன்படுத்தப்படும் என்பதோடு அந்த
பஸ்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று போக்குவரத்து துறைக்கு
பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

அந்த பஸ்கள் வேறு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாது என்பதால் பொதுமக்கள்
இது குறித்து அச்சம் கொள்ளத்தேவையிலை என்று அவர் சொன்னார்.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. எஸ்.ஓ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன்
மூலம் அரசின் இந்த முயற்சிகளுக்கு பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை
வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்
வகையில் சுமார் 7.3 கோடி வெள்ளி மதிப்பிலான நமது சிலாங்கூர் உதவித்
தொகுப்புத் திட்டத்தை மந்திரி புசார் நேற்று அறிவித்தார்.


Pengarang :