ECONOMYPBTSELANGOR

இலக்கவியல் கொள்கை அமலாக்கத்தால் மனுக்குல மதிப்புக்கூறுகள் புறக்கணிக்கப்படாது- மந்திரி புசார்  உத்தரவாதம்

ஷா ஆலம், ஜன 21– இலக்கவியல் கொள்கைக்கு உத்வேகம் அளிக்கும் முயற்சியில் மனுக்குல மதிப்புக்கூறுகள் ஒரு போதும் புறக்கணிக்கப்படாது என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவாதம் அளித்துள்ளார்.

இலக்கவியலை முழுமையாக சார்ந்திராமல் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் மனுக்குல மதிப்புக்கூறுகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

எனது அலுவலகத்திலுள்ள அதிகாரிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களை அடிக்கடி சந்திக்கக்கூடிய முகப்பிட பணியாளர்கள் உள்பட அனைவரும் இந்த உயரிய நெறிகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

நமது துறையுடன் தொடர்பில்லாத விஷயத்திற்காக நம்மை நாடி சிலர் சில சந்தர்ப்பங்களில் வரக்கூடும். ஒரு வேளை அவர்களுக்கு வேறு உதவிகள் தேவைப்படலாம். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழலாம் என்று அவர் சொன்னார்.

2021 புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஆற்றிய உரையில் மந்திரி புசார் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய திட்டங்களை அமலாக்குவதில் புதிய அணுகுமுறைகளைக் கண்டறியும் முயற்சியில் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னையர் திட்டம், சுகாதார பராமரிப்புத் திட்டம், அடிப்படை கல்விக் கட்டணத் திட்டம், நாடி மற்றும் ரைட் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தி வருகிறது என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :