NATIONALPBTSELANGOR

கோத்தா அங்கெரிக் மாநில சட்டமன்றத்தில் தொகுதியில், உணவு வங்கி திட்டம் தொடரும்.

ஷா ஆலம், 22 ஜன: கடந்த ஆண்டு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) முதல் கோத்தா அங்கெரிக் மாநில சட்டமன்றத்தில் தொகுதியில் (டி.யூ.என்)  மேற்கொள்ளப்படும் உணவு வங்கி திட்டம் தொடரும்.

இத்திட்டத்தில் 3,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உதவி பெற்றன  அது ஒரு ஊக்கமளிக்கும் எண்ணிக்கையாகும்  என்ற அடிப்படையில் தொடர்ந்து இந்த திட்டம் தொடரப் படவுள்ளது என்று அதன் மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இருப்பினும், இம்முறை மக்கள் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புகள் காரணமாக இந்த ஆண்டு உதவி பெறுநர்களின் எண்ணிக்கை குறையும் என்று நஜ்வான் ஹலிமி எதிர்பார்க்கிறார்.

இம்முறை “கித்தா சிலாங்கூர் “ உதவித் திட்டத்தில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை திருப்தி அளிக்கிறது ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உதவிப்பெறுவோர் குறைவாக  இருப்பதாக நான் உணர்கிறேன்.

“இருப்பினும், தேவைப்பட்டால், குடியிருப்பாளர்கள் DUN அலுவலகத்திற்கு வரலாம்,  இந்த PKP காலகட்டத்தில் அவர்களின் சுமையை குறைக்க நாங்கள் உதவ முயற்சிப்போம்” என்று அவர்  இன்று செக்சன் 13றில் உள்ள செல்கேர் கோவிட் 19 நோய் தொற்று பரிசோதனை முகாமுக்கு ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் அப்துல் சமத் உடன் வருகைப் புரிந்தப் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

ஆன்லைன் கற்றல் செயல்முறைக்கு வசதியாக குறைந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்க தனது தரப்புஉதவும் என்று நஜ்வான் கூறினார்.

கடந்த புதன்கிழமை, “கித்தா சிலாங்கூர் “என்ற உதவித் திட்டத்தை தொடக்கி வைத்து சிறப்பு உரையில், சிலாங்கூர்  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மெஸ்ரா ராக்யாட் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு  DUN சட்டமன்ற  தொகுதிக்கும் RM100,000 மற்றும் மாநில எம்.பி.க்களுக்கு RM50,000 ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.


Pengarang :