ACTIVITIES AND ADSMEDIA STATEMENTSELANGOR

உணவு உதவித் திட்டத்திற்கு மேரு தொகுதி 100,000 வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 25- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு உதவித் திட்டத்தை மேற்கொள்ள மேரு சட்டமன்றத் தொகுதி ஒரு லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வசதி குறைந்த பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் வேலை இழந்தவர்களை இலக்காக கொண்டு இந்த உணவு உதவித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஃபக்ருள்ராஸி முகமது கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக இரண்டாயிரம் பேருக்கு உதவிகள் வழங்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதன் வழி பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க முடியும் எனத் தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டார்.

இந்த உணவு உதவித் திட்டம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும். இந்த உணவுப் பொருள்கள் நேரடியாகவோ கிராம சமூக அமைப்புகளின் வாயிலாகவோ சம்பந்தப்பட்டவரகளிடம் சேர்க்கப்படும் என்றார் அவர்.

உணவு உதவி தவிர்த்து, மக்களின் தேவையின் அடிப்படையில் இதர வகையான உதவிகளை வழங்குவது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், மருத்துவ, வர்த்தக மற்றும் ஆலோசக உதவிகளை மேரு வட்டார மக்களுக்கு தாங்கள் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் இத்தகைய உதவிகளைப் பெற விரும்புவோர் மேரு சட்டமன்ற தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் சொன்னர்.


Pengarang :