ACTIVITIES AND ADSSELANGOR

ஏ,யு. 2 அடுக்குமாடி குடியிருப்பின்   மினி நூலகத்தை தரம் உயர்த்த வெ.10,000 மானியம்

உலு கிளாங், ஏப் 12-இங்குள்ள ஏ.யு.2 அடுக்குமாடி குடியிருப்பின்  மினி நூலகத்தை விரிவுபடுத்துவதற்கும் மேலும்  அதிகமான புத்தகங்களை வாங்குவதற்கும் ஏதுவாக  சிலாங்கூர் மாநில அரசு பத்தாயிம் வெள்ளியை மானியமாக வழங்கியது.

அந்த  நூலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்  644 சதுர அடி கொண்ட அந்த  இடம் போதுமானதாக இல்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த  நூலகத்தின் மிகவும் அவசியமானது என நாங்கள் கருதுகிறோம். ஆகவே, அந்த நூலகத்தை விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்வதற்காக அந்த குடியிருப்பின் தோட்டக் கலை கிளப்பிடம் அந்த மானியத்தை ஒப்படைக்கவுள்ளோம் என்றார் அவர்.

இந்த குடியிருப்பின் தோட்டக் கலை கிளப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இவர்கள் பல்வேறு பயிர்களை இப்பகுதியில் பயிரிட்டுள்ளதோடு கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நூலகத்தையும உருவாக்கியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ.யு. 2 அடுக்குமாடி குடியிருப்பின் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.  உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் ஷாரி சுங்கிப், அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத் தலைவர் முகமது பவுசி முகமது யாத்திம், அடுக்குமாடி குடியிருப்பின் விவசாய  கலை கிளப் தலைவர் முகமது ஹலிம் முகமது சைட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :