ECONOMYNATIONAL

நெடுஞ்சாலைகளில் வாகன அதிகரிப்பை கண்காணிக்க போலீஸ் ரோந்துப் பிரிவுக்கு உத்தரவு

கோலாலம்பூர், ஏப் 21– அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பை கண்காணிக்கும்  மற்றும் போக்குவரத்தை பரவலாக்கும் பணியை  நெடுஞ்சாலை ரோந்துப் பணியை  போலீசார்  தீவிரப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதித்தப் பின்னர் நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளிலும் முக்கிய சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் துணைத்  தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

எனினும், வாகனப் போக்குவரத்தும் விபத்துகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக பெர்னாமா டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

விபத்துகளை தடுப்பது உள்பட சாலை விதிமுறைகளின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்  அதேவேளையில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வுவெடுக்கும் பகுதிகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்யும் பணியில் ரோந்து போலீசார் ஈடுபடுட்டு வருகின்றனர் என்றார் அவர்.

இது தவிர, வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில  மற்றும் மாவட்ட நிலையில்  அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :