Press StatementsSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் திட்டம்

ஷா ஆலம், மே 2- வரும் 15வது பொதுத்தேர்தலின் போது சிலாங்கூரில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் ராக்யாட் கட்சி திட்டமிட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் நிலை குறித்தும் தமது தரப்பு விரிவான அளவில் விவாதிக்கவுள்ளதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போது 21 ஆக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையை வரும் பொதுத் தேர்தலில் 25ஆக உயர்த்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார் அவர்.

மேலும், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின் நிலை குறித்தும் நாம் விவாதிக்கவுள்ளோம். அவற்றில் ஒரு தொகுதியான சுங்கை புசார் கிட்டத்தட்ட நமக்கு கிடைத்துவிடும் சாத்தியம் உள்ளது. மற்றொரு தொகுதியான தஞ்சோங் காராங் குறித்து இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள மந்திரி புசார் இல்லத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் இஃப்தார் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

கட்சியை அழிக்க காத்திருக்கும் தீய சக்திகளுக்கு எதிராக ஒருமைப்பாட்டை காட்டுவதற்காக இந்த நோன்பு துறப்பு நிகழ்வு நடத்தப்படுவதாக சிலாங்கூர் மந்திரி புசாருமான அமிருடின் சொன்னார்.

நமது கட்சியின் மிக்பெரிய தூணாக சிலாங்கூர் மாநிலம் விளங்குகிறது. இம்மாநிலத்தை அவர்கள் கைப்பற்றினால் நாடளாவிய அளவில் நாம் ஆட்டங்கண்டு விடுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :