ALAM SEKITAR & CUACAHEALTHPBTSELANGOR

கோம்பாக்கில்  நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மே 17– கோம்பாக் பகுதியில் நாளை தொடங்கி நான்கு  நாட்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது

நாளை காலை 9.00 மணி தொடங்கி புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் உள்ள எம்.பி.ஏ,ஜே. மண்டபத்திலும் உலு கிளாங் தொகுதியில் உள்ள எம்.பி.ஏ,ஜே. பல்நோக்கு மண்டபத்திலும் இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும்.

நாளை மறுநாள் சுங்கை துவா தொகுதியில் உள்ள டேவான் ஸ்ரீ சியாந்தானிலும் கோம்பாக் செத்தியா தொகுதியில் உள்ள டேவான் பெரிங்கினிலும்  இந்த இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கூறியது.

வரும் 20ஆம் தேதி ரவாங் தொகுதியின் 17வது மைலிலும் தாமான் டெம்ப்ளர், டேவான் சரோஜா கம்போங் பெண்டஹாராவிலும் இவ்வியக்கம் நடத்தப்படும். 21ஆம் தேதி குவாங் தொகுதியிலுள்ள டேவான் செர்பகுணா குவாங்கில் இந்த இயக்கத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

22ஆம் தேதி ஸ்ரீ செர்டாங் தொகுயின் பியு 7 மண்டபத்திலும் கின்ராரா தொகுதியின் சமூக மண்டபத்திலும் 23ஆம் தேதி சுபாங் ஜெயா தொகுதியின் யுஎஸ்ஜே 1 லாமான் சுக்கானிலும் ஸ்ரீ செத்தியா தொகுதியின் எம்.பி.பி.ஜே மண்டபத்திலும் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.

இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாகவும் http://screening.selangkah.my  எனும் அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும்படி அக்குழு  முகநூல் வழி கேட்டுக் கொண்டது.

இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடங்கி இதுவரை காஜாங், செமினி, தெராத்தாய், பலாக்கோங் சுங்கை ராமால், டுசுன் துவா ஆகிய தொகுதிகளில இந்த இலவச பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 


Pengarang :