OEX / AFP)
ANTARABANGSASELANGOR

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிதி உருவாக்கம்

ஷா ஆலம், மே 21– இஸ்ரேலிய இராணுவத்தின் அடக்குமுறையினால் பெரிதும்எக பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பரிவுமிக்க மனிதாபிமான நிதியை நேற்று ஆரம்பித்தது.

நேற்று தொடங்கி இந்த பத்து நாள் திரட்டும் திரட்டும் இயக்கத்தின் வாயிலாக பத்து லட்சம் வெள்ளியை சேகரிக்க தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நிதி சிலாங்கூர் மாநில பாலஸ்தீன மக்கள் பரிவுத் திட்டத்தின் வழி அந்நாட்டு மக்களிடம் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவைப் புலப்படுத்தும் வகையில் மாநில அரசு இந்த நிதித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

அரசு சாரா இயக்கத்துடன் இணைந்து இத்திட்டத்தை மாநில அரசு  மேற்கொள்கிறது. மக்கள் பிரதிநிதிகள், மாநில அரசின் துணை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடைகள் பாலஸ்தீன மக்களிடம் சேர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

இந்த நிதித்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்குவோருக்கு வருமானவிரி விலக்களிப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :