ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சேவை- புக்கிட் காசிங் தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 8- புக்கிட் காசிங் தொகுதி ஏற்பாட்டில் வட்டார மக்களுக்கு மனநல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.  மிகக்குறைவான அதாவது ஐம்பது வெள்ளி கட்டணத்தில் மனநல நிபுணர்களைக் கொண்டு இச்சேவை வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.

முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக மனோரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இச்சேவை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

ரிலேட் மெண்டல் ஹெல்த் எனும் அரசு சாரா அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை அமல்படுத்துகிறோம். வழக்கமாக இத்தகைய சேவைக்கு 300 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும். எனினும், தொகுதி மக்கள் தங்களின் மனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் தீர்வு காணப்பதற்கு ஏதுவாக தொகுதி சமூக சேவை மையம் சார்பில் கட்டணக் கழிவை வழங்குகிறோம் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மனநல நிபுணர்களிடமிருந்து உரிய ஆலோசனைகளைப் பெறுவர் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முதலில் ஐம்பது பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறிய அவர், ஆர்வமுள்ளோர் https://forms.gle/HXNaBp1mQs7TYLYq6.  அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

 


Pengarang :