ECONOMYNATIONALSELANGOR

மக்களுக்கான உதவித் திட்டத்தை  மந்திரி புசார் நாளை அறிவிப்பார்

ஷா ஆலம், ஜூன் 8– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை  அறிவிப்பார்.

அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரக்கூடிய அந்த உதவித் திட்டத்தை நாளை 2.30 மணியளவில் மந்திரி புசார் வெளியிடுவார்.

‘வெற்றியை நோக்கி ஒன்றிணைந்து செல்வோம்‘ எனும்  கருப்பொருளிலான அந்த உதவித் திட்டத்தை நாளை 2.00 மணியளவில் நான் தாக்கல் செய்யவிருக்கிறேன். எனது முகநூல் மற்றும் டிவிட்டர் வழியாக இந்த் ஒளிபரப்பை காணலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மந்திரி புசாரின் அந்த உதவித் திட்டம் தொடர்பான அறிவிப்பை Facebook Media Selangor அல்லது Selangor TV யுடியூப் காணொளி வழியாகவும் காணலாம்.

மாநில அரசு மக்களுக்கான உதவித் திட்டங்களை அறிவிப்பது இது முதன் முறையல்ல. கடந்தாண்டு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்தது முதல் பல உதவித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் முதலாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட போது 12 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பொருளாதார மீட்சித் திட்டத்தை மந்திரி புசார் அறிவித்தார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி 27 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான இரண்டாம் கட்ட உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

மேலும், கடந்தாண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி 5.58 கோடி வெள்ளி மதிப்பிலான மாநில பொருளாதார மீட்சித்  திட்டம் அறிவிக்கப்பட்டதோடு இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி 7.38 கோடி வெள்ளி மதிப்பில் கித்தா சிலாங்கூர் திட்டம் அமல் செய்யப்பட்டது.


Pengarang :