ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோய்ப் பரவலைத் தடுக்க தாய்லாந்திலிருந்து கால்நடைகளை இறக்குமதி செய்யத் தடை

புத்ரா ஜெயா, ஜூன் 8- தாய்லாந்திலிருந்து மாடு மற்றும் எருமைகளை இறக்குமதி செய்ய மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

தாய்லாந்திலுள்ள 41 பகுதிகளில் எல்.எஸ்.டி. எனப்படும் பெரியம்மை நோய் கால்நடைகளை பீடித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கால்நடைத் துறையை பாதுகாக்கும் நோக்கிலும் தாய்லாந்திலிருந்து பெரியம்மை நோய் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கால்நடை சேவைத் துறை கூறியது.

தாய்லாந்திலிருந்து மாடுகள் அல்லது எருமைகளை வாங்குதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அத்திட்டத்தை ரத்து செய்யும்படி இறக்குமதியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரை நாங்கள்  கேட்டுக் கொள்கிறோம் என அத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் பண்ணையில் உள்ள கால்நடைகள் பெரியம்மை நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக மாநில அல்லது மாவட்ட கால்நடை சேவைத் துறையிடம் தகவல் தெரிவிக்குமாறு கால்நடை வளர்ப்போரை அதுறை கேட்டுக் கொண்டது,.


Pengarang :