HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயிலிருந்து மீண்டவர்களுக்கு 12 வாரங்களுக்கு நோய்த் தாக்கம் இருக்கும்

ஷா ஆலம், ஜூன் 9- கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 12 வாரங்களுக்கு மேல் அந்த நோயின் தாக்கத்தைக் கொண்டிருப்பர் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.

வழக்கமாக சிலருக்கு காய்ச்சல் மற்றும்  களைப்பு காணப்படும் என்றும் மேலும் சிலர் உடல் பலவீனம், ஞாபக மறதி, மூச்சுத் திணறல், மூட்டு வலி, தலைவலி போன்ற பிச்னைகளால் அவதியுறக்கூடும் என்றும் அமைச்சின் அறிக்கை ஒன்று கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய இந்த அறிகுறிகள் 12 வாரங்கள் அல்லது அதற்கும் மேல் நீடிக்கும் என்றும் அது தெரிவித்தது.

இத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருக்கும் முன்னாள் கோவிட்-19 நோயாளிகள் உடனடியாக கிளினிக் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டும் என்பதோடு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியமாகும் என அமைச்சு வலியுறுத்தியது.

  1. அவசியமான காரணங்களுக்காக வெளியில் செல்வது தவிர்த்து மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
  2. கிருமி நாசினி அல்லது சோப்பை பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், முகக்கவசம் எப்போது அணிந்திருக்க வேண்டும் மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
  3. பிறருடன் நெருக்கமாக நின்று உரையாடுவதை  தவிர்க்க வேண்டும்.
  4. நெரிசலான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதை  தவிர்க்க வேண்டும்.
  5. விரைந்து கோவிட்-19 தடுப்பூசியைப் பெற வேண்டும்.

Pengarang :