KUALA LUMPUR, 9 Jun — Presiden Parti Keadilan Rakyat (PKR) Datuk Seri Anwar Ibrahim menaiki kenderaannya ketika beredar selepas menghadap Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah di Istana Negara hari ini. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA

அவசரகாலத்தை முடிவுக்கு கொண்டு வர மாமன்னரிடம் அன்வார் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 9– மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்
அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுடனான இன்றைய
சந்திப்பின் போது அவசரகாலத்தை முடிவுக்கு கொண்டு வருவது
தொடர்பான கோரிக்கையை தாம் முன்வைத்ததை எதிர்க்கட்சித் தலைவர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

இங்குள்ள இஸ்தானா நெகாராவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
மாமன்னருடன் நடத்திய சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட
கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் சொன்னார்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான பல விவகாரங்கள் இந்த
சந்திப்பில் இடம் பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார். மாமன்னருடன்
சந்திப்பு நடத்திய பின்னர் அரண்மனை வாயிலில் காத்திருந்த
நிருபர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :