ECONOMYHEALTHPBTSELANGOR

 கோவிட்-19 பரிசோதனையில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வியூகம்- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், ஜூன் 9- கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் விதமாக சுகாதார பாதுகாப்பு வியூகத்தை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.  

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்ட தொகுப்பின் கீழ் வரையப்பட்ட இந்த வியூகத்திட்டம் 55 கோடியே  15 லட்சத்து 60 வெள்ளியை உள்ளடக்கியுள்ளது.

நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியைக் கொண்டிராத  தரப்பினரை அடையாளம் காண்பது, கோவிட்-19 பரிசோதனையை அதிகமானோர் மேற்கொள்வதை ஊக்குவிப்பது மற்றும்  தொழில்துறைகளில் நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது ஆகிய முயற்சிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

அந்த வியூகத்தின் வரையப்பட்ட திட்டங்கள் வருமாறு-

  1. சுமார் ஒரு லட்சம் பேரை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்வது. இத்திட்டம் 10.7 மில்லியன் வெள்ளி செலவை உள்ளடக்கியிருக்கும்.
  2. மாநில அரசின் ஏற்பாட்டிலான பரிசோதனை இயக்கங்களில் நோய்த் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு உடல் நிலையை மதிப்பீடு செய்வதற்காக உபகரணம் மற்றும் உணவுக் கூடை வழங்கப்படும்.  இத்திட்டத்திற்கு 12.5 லட்சம் வெள்ளி செலவு பிடிக்கும்.
  3. பொது மக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை கோவிட்-19  தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான கிராப் போன்ற மின்-அழைப்பு வாகன கட்டணத்திற்கு 20 வெள்ளி கழிவு வழங்கப்படும். பத்து லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டம் மூலம் 50,000 பேர் பயன் பெறுவர்.
  4. தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகளில் சுகாதார கண்காணிப்பை மதிப்பிடுவதற்கும் பொருளாதாரத் துறைகளில்  தடுப்பூசித் திட்டம் அமல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் சிறப்பு செயல்குழு  அமைக்கப்படும். இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐந்து லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது

Pengarang :