ECONOMYHEALTHPBTSELANGOR

மாநில பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்க ஏழு திட்டங்கள்

ஷா ஆலம், ஜூன் 9– சிலாங்கூர் மாநிலத்தில் தொழில்துறைகளை காப்பாற்றுவற்கும் பொருளாதார நடவடிக்கைள் தொடர்ந்து துடிப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல் செய்கிறது.

கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத் தொகுப்பின் இரண்டாம் வியூகத்தின் கீழ் அமல் செய்யப்படும் திட்டங்கள் வருமாறு-

  1. சிலாங்கூர் அட்வான்ஸ் – பல்வேறு கடனுதவித் திட்டங்கள் வாயிலாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் நோக்கில் கூடுதலாக 20 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்வது.
  2. உணவு விநியோக உத்தரவாதத் திட்டம் – சுழல் நிதியாக ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வது மற்றும் உணவு சுழற்றி நிலையாக இருப்பதை உறுதி செய்ய சந்தை கிளைகளை அமைப்பது.
  3. விவசாய பரிவுத் திட்டம்-  விவசாய பொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி  ஐம்பது விழுக்காட்டு விலைக் கழிவில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் இத்திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்வது.
  4. உற்பத்தி பெருக்கத் திட்டம்- பல்வேறு அணுமுறைகளின் வாயிலாக விவசாயிகளும் கால் நடை வளர்ப்போரும் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதற்கு  உதவ 19 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் விதைகள் வழங்குவது மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை விநியோகிப்பதும் இதில் அடங்கும்.
  5. ஹிஜ்ரா கடனுதவித் திட்டம்- வர்த்தகத்தை புதிதாக தொடக்கும் சுமார் எட்டாயிரம் தொழில் முனைவோருக்கு தொடக்க மூலதன நிதியாக வழங்க 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வது. நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காரணமாக வேலை இழந்தவர்கள் மற்றும் வருமான இழப்பிற்கு ஆளானவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
  6.  பிளாட்ஸ் சிலாங்கூர்  திட்டம்- அங்காடி வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள்         இலக்கவியல் பற்றிய அடிப்படைக் கல்வி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி             பெறுவதற்கும் ஏதுவாக இத்திட்டத்தை  விரிவுபடுத்துவது
  1. சுற்றுலாத் துறைக்கு நிதியுதவி- மாநிலத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு. சுற்றுலா நடவடிக்கைளுக்கு கடனுதவி, சுற்றுலா பற்றுச் சீட்டு 2.0 திட்டம் ஆகியவற்றோடு ஒரு முறை மட்டுமே வழங்கக்கூடிய நிதியுதவித் திட்டமும் அமல் செய்யப்படும்.

Pengarang :