ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மகேரான் தேவையில்லை- மக்கள் பிரச்னையை நாடாளுமன்றம் வழி தீர்ப்போம்-  பக்கத்தான் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 11– நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளை குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றை சமாளிக்க  தேசிய நடவடிக்கை  மன்றம் (மகேரான்)  அமைக்கும் பரிந்துரையை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நிராகரித்துள்ளது.

இக்கூட்டணியின் ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பரிந்துரையை தாங்கள் நிராகரிப்பதாக அதன் தலைவர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் அக்கூட்டணி வலியுறுத்தியது.

மக்கள் எதிர்நோக்கும் கோவிட்-19, பொருளாதாரம்,  மற்றும் அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பான முறையில் செயல்படக்கூடிய ஜனநாயகம் முக்கியப் பங்கினை ஆற்ற முடியும். மக்களின் குரலை செவிமடுக்கக்கூடிய மற்றும் தீர்வுக்கான வழிகளை ஆராயக்கூடிய சரியான இடமாக நாடாளுமன்றம் விளங்குகிறது என்று அது கூறியது.

கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு ஆகியோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருந்தனர்.

நேற்று மாட்சிமை தங்கிய பேரரசரை சந்தித்த போது தேசிய பாதுகாப்பு மன்றத்தை அமைப்பதற்கான பரிந்துரையை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது முன்வைத்திருந்தார்.

தேசிய நடவடிக்கை மன்றத்தின் வாயிலாக பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையில் இந்த பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக மகாதீர் கூறினார்.


Pengarang :