ECONOMYPENDIDIKANSELANGOR

சிறப்புத் தேர்ச்சி பெற்ற எஸ்.பி.எம். மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு- கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் வழங்குகிறார்

ஷா ஆலம், ஜூன் 14– 2020ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாக தேறிய கோல குபு பாரு தொகுதி வாக்காளர்களின் பிள்ளைகள்  ரொக்கப் பரிசுத் தொகைக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொகுதி சேவை மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ரொக்கப் பரிசுத் தொகைக்கு அத்தேர்வில் 5 ‘ஏ‘க்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

எஸ்.பி.எம் தேர்வில் 5ஏ பெற்ற மாணவர்களுக்கு 80 வெள்ளியும் 6ஏ பெற்ற மாணவர்களுக்கு 100 வெள்ளியும் 7ஏ பெற்ற மாணவர்களுக்கு 150 வெள்ளியும்  8ஏ பெற்ற மாணவர்களுக்கு 200 வெள்ளியும் 9ஏ பெற்ற மாணவர்களுக்கு 250 வெள்ளியும்  10ஏ மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லு கீ ஹியோங் கூறினார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமூக ஊடகத்தில் உள்ள கியூஆர் குறியீடு மற்றும் சிறப்பு இணைப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் இதற்கான விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் பிறப்பு பத்திரம் மற்றும் எஸ்.பி.எம். தேர்வு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மேல் விபரங்களுக்கு  வோங் யோக் ஹின் ( 019-6147178) அல்லது அய்ன் அமிரா ( 011-19728303) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 


Pengarang :