ECONOMYPBTSELANGOR

சந்தையில்  மிதமிஞ்சிய காய்கறிகளை விற்க அக்ரோசெல் உதவி

ஷா ஆலம், ஜூன் 14– சந்தையில் மிதமிஞ்சிய காரணத்தால் விற்க முடியாத நிலையிலிருந்தும் காய்கறிகளை விவசாயிகள் விற்பதில் உதவி புரிய அக்ரோசெல் எனப்படும் சிலாங்கூர் வேளாண் தொழில்முனைவோர் அமைப்பு முன்வந்துள்ளது.

விவசாயிகளிடம் அதிகப்படியாக இருக்கும் உற்பத்தி பொருள்கள் சிலாங்கூர் விவசாய பரிவுத் திட்டத்தின் கீழ் இயங்கலை வாயிலாக இரு இடங்களில் விற்பனை செய்யப்படும் என்று அக்ரோசெல் தலைவர் முகமது புக்ஹாரி பாச்சோக் கூறினார்.

பாங்கி மற்றும் பண்டான் இண்டாவிலுள்ள இரு இடங்களில் இந்த விற்பனை மையம் செயல்படுவதாக கூறிய அவர்,  என்ற agroshop.com.my அகப்பக்கம் வாயிலாக  அந்த விவசாய பொருள்களை வாங்கலாம் என்றார்.

இந்த விற்பனை மையங்களில் விற்கப்படும் விவசாய பொருள்கள் யாவும் 50 விழுக்காட்டு விலைக் கழிவில்  விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகப்படியான உற்பத்தி காரணமாக சந்தையில் மிதமிஞ்சி காணப்படும் சோளம், மிளகாய், வாழை போன்ற விவசாய பொருள்களை சிலாங்கூர் விவசாய பரிவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்காக மாநில அரசு ஐந்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :