Majlis Perbandaran Kajang (MPKj)
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காஜாங் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் 383 பேர் தடுப்பூசித் திட்டத்தில் பதிவு

ஷா ஆலம், ஜூன் 23– காஜாங் நகராண்மைக் கழகத்தின் நடமாடும் பிரசார இயக்கத்தின் வாயிலாக செமினி வட்டாரத்தைச் சேர்ந்த 383 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பதிவு நடவடிக்கையின் போது பெக்கான் செமினி பொது சந்தையில் 155 பேரும் கம்போங் பாசீர் பாருவில் 94 பேரும் கம்போங் சுங்கை மாச்சாங்கில் 134 பேரும் பதிவு செய்யப்பட்டனர்.

கோல லங்காட் நில மற்றும் மாவட்ட அலுவலகம், மாவட்ட சுகாதார இலாகா ஆகிய துறைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட  இந்த இயக்கத்தில் பதிவு செய்தவர்களில்  80 விழுக்காட்டினர் மூத்த குடிமக்களாவர் என்று நகராண்மைக் கழகத்தின் பொது உறவு அதிகாரி கமாருள் இஸ்லான் சுலைமான் கூறினார்.

மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்யும் வழிமுறைகள் தெரியாதது, தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியை தவறவிட்டது, விவேக கைப்பேசி இல்லாதது உள்பட பல காரணங்களால் பதிவு செய்து கொள்ள முடியாத  நிலை அவர்களுக்கு உண்டானது என்றார் அவர்.

இந்த ஏற்பாட்டைச் செய்த நகராண்மைக் கழகத்திற்கு பதிவில் கலந்து கொண்டவர்கள் நன்றி கூறினர். தடுப்பூசி குறித்த விபரங்களைப் பெறுவதற்கும் பதிவு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் அரிய வாய்ப்பாக இது அமைந்ததாக தெரிவித்தனர் என்று கமாருள் இஸ்லான் சொன்னார்.

 


Pengarang :