ECONOMYHEALTHPBTSELANGOR

கோவிட்-19 அல்லாத மருத்துவமனையாக ஷா ஆலம் மருத்துவமனை மாற்றம்

பந்திங், ஜூன் 25- கோவிட்-19  அல்லாத நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக  ஷா ஆலம் மருத்துவமனை நேற்று தொடங்கி மாறியுள்ளது.

இந்த மாற்றத்தின் வழி  ஷா ஆலம் மருத்துவமனை இனி கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கும் என்று சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் சொன்னார்.

இந்த மருத்துவமனையில் கோவிட்- 19 நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இத்தகைய நோயாளிகள் பின்னர் அம்பாங் மருத்துவமனை மற்றும் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு மாற்றப்படுவர். நோய்த் தாக்கம் குறைவாக உள்ளவர்கள் செர்டாங்கில் உள்ள பி.கே.ஆர்.சி.  தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுவர் என்றார் அவர்.

இந்த மாற்றத்தின் வழி இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவமனையாக அம்பாங் மருத்துவமனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷா ஆலம் மருத்துவமனையின் அந்தஸ்து மாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கும கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கும் தற்போது  சிகிச்சையளித்து வரும் காஜாங் மருத்துவமனை மற்றும் பந்திங் மருத்துவமனை ஆகியவற்றையும் கோவிட்-19 அல்லாத மருத்துவமனைளாக மாற்ற தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :