ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் சொந்த தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கியது

ஷா ஆலம், ஜூன் 28- சிலாங்கூர் மாநில அரசின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கியது. கோம்பாக், தாமான் செலாயாங், ஸ்ரீ சியான்தான் மண்டபத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் இப்பணி சீராக மேற்கொள்ளப்படுவதை சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது.

பதிவை சரிபார்ப்பது, சோதனை, சுகாதார விளக்கமளிப்பு மற்றும் தடுப்பூசி செலுத்துதல் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் எஸ்.ஒ.பி. எனப்படும் சீரான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது.

செல்கேர் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தில் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் வசதிக்காக  தற்காலிக கூடாரங்கள் மற்றும் நாற்காலிகள் தயார் செய்யப்பட்டிருந்தன.

இந்த தடுப்பூசி மையத்தின் செயல்பாடுகளை சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் நேரில் பார்வையிட்டார்.

இந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி சீராக நடைபெறுவதோடு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தடுப்பூசி பெற வந்தவர்களில் ஒருவரான நுர்ஹிடாடா அப்துல் மஜிட் கூறினார்.

இதனிடையே, வரும் புதன்கிழமை வரையிலான மூன்று தினங்களில் 4,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கோம்பாக் செத்தியா தொகுதி ஒருங்கிணைப்பாளரான ரஹிம் காஸ்டி கூறினார்.


Pengarang :