HEALTHNATIONALPBT

வங்கியில் கடன் பெற்ற அனைவருக்கும் ஆறு மாத “மோரட்டோரியம்“ சலுகை

ஷா ஆலம், ஜூன் 28- வங்கியில் கடன் பெற்ற அனைவருக்கும் மோரட்டோரியம் எனப்படும் கடனை காலந் தாழ்த்தி செலுத்துவதற்கான சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர், நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினர் உயர் வருமானம் பெறும் டி20 தரப்பினர், குறு தொழில் முனைவோர் என பாகுபாடின்றி அனைத்து  தரப்பினருக்கும் இந்த சலுகை வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

இந்த திட்டம் எந்த நிபந்தனையுமின்றி  இயல்பாக அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :