NI
ECONOMYHEALTHPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தை தீவிரப்படுத்த செல்கேட் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 29- சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தொழில்துறை பணியாளர்கள் மற்றும் தனியார் துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநில அரசு செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனம் வாயிலாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூரில் உள்ள ஐந்து இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி ஏககாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செல்கேட் நிறுவனத்தின் சட்ட மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கான தலைமை நிர்வாகி முகமுது பவுஸி இப்னி ஹஜார் கூறினார்.

பாங்கி இவோ மால்,  பெட்டாலிங் ஜெயா டிரோப்பிகானா கார்டன் மால், கிளானா ஜெயா காம்ப்ளெக்ஸ் பி.கே.என்.எஸ்., ஷா ஆலம் டி பால்மா ஹோட்டல், புக்கிட் ஜாலில் அவுரா மால் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக அதிகமானோர் குறிப்பாக தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினர் தடுப்பூசியை பெறும் பட்சத்தில் நோய் தடுப்பாற்றல் கொண்ட குழுமத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவ முடியும் என்றார் அவர்.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் முதல் இறுதி வரை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலை பின்பற்றி மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், பர்மாநியாகா நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :