ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் 7.3 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், ஜூலை 2- மலேசிய மக்கள் தொகையில் 7.3 விழுக்காட்டினர் அதாவது 23 லட்சத்து 93 ஆயிரத்து 882 பேர் நேற்று வரை இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இம்மாத மத்திய பகுதிக்குள் 32 லட்சம் பேர் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நேற்று வரை மொத்தம் 83 லட்சத்து 46 ஆயிரத்து 697 பேர் இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 59 லட்சத்து 52 ஆயிரத்து 815 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 23 லட்சத்து 93 ஆயிரத்து 882 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடாம் பாபா கூறினார்.

நேற்று மட்டும் 263,012 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற மாநிலங்களில் 318,774 பேருடன் சிலாங்கூர் முதலிடம் வகிக்கும் வேளையில் அதற்கு அடுத்து ஜொகூர் (256,096), சரவா (252,496), கோலாலம்பூர் (209,165) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதனிடையே, பட்டவெர்த்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி, தடுப்பூசியைப் பெறுவதற்கு இதுவரை 1 கோடியே 60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக கூறினார்.


Pengarang :