ANTARABANGSAHEALTHNATIONALPENDIDIKAN

நாட்டில் 9,180; சிலாங்கூரில் 4,400: தொடர்ந்து ஏற்றம் காணும் கோவிட் -19 அலை

ஷா ஆலம், ஜூலை 9– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சமார் 40 நாள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒன்பதாயிரத்தை எட்டியுள்ளது. இன்று அந்த எண்ணிக்கை 9,180 ஆக பதிவான வேளையில் சிலாங்கூர் மாநிலம் 4,400 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.

ஆகக் கடைசியாக கடந்த மே மாதம் 29 ஆம் தேதி நாட்டில் 9,020 கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 817,838 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் 1,271 பேரும் நெகிரி செம்பிலானில் 899 பேரும், சரவாவில் 406 பேரும் கெடாவில் 417 பேரும் ஜொகூரில் 315 பேரும் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

சபா (323), பேராக் (241), மலாக்கா (222), பகாங் (214), கிளந்தான் (151), பினாங்கு (142), திரங்கானு (82), லபுவான் (80), புத்ரா ஜெயா (16), பெர்லிஸ் (1) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


Pengarang :