HEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

கோல குபு பாரு தொகுதியில் வெ. 82,000 செலவில் உணவு விநியோகத் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 17– கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக  கோல குபு பாரு தொகுதி 82,446.45 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி மத்தியில் தொடங்கி ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த உணவுக் கூடை திட்டதின் வழி குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றதாக தொகுதி உறுப்பினர் லீ கீ ஹோங் கூறினார்.

கிராமத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர் சங்க பிரதிநிதிகள் மூலம் இந்த உணவுப் பொருள்கள் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு விநியோகிக்கப்பட்டன. வெள்ளைக் கொடி பறக்கும் வீடுகளுக்கும் உதவிப் பொருள்கள் சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

உணவுப் பொருள்களுக்கு செய்யப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 வெள்ளி மற்றும் 100 வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் தொகுதியிலுள்ள வியாபாரிகளுக்கு உதவும் வகையில் இந்த உணவுக் கூடைத் திட்டத்திற்கு தேவையான பொருள்கள் உள்ளுரில உள்ள கடைகளில் வாங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :