KUALA LUMPUR, 11 Okt — Menteri Kewangan Lim Guan Eng ketika membentangkan Belanjawan 2020 di Parlimen hari ini.?–fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA??KUALA LUMPUR, Oct 11 — Finance Minister Lim Guan Eng tabling the 2020 Budget at the Parliament today.?–fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
ECONOMYHEALTHNATIONALSELANGOR

நாடாளுமன்றத்தில் 80 உறுப்பினர்களுக்கு மட்டும் வாய்ப்பு- பக்கத்தான் நிராகரிப்பு

ஷா ஆலம், ஜூலை 22- நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 80 ஆக நிர்ணயிப்பதை பக்கத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி) நிராகரித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் போதெல்லாம் அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் போது மக்களவை சபாநாயகர் டத்தோ அஜிசான் ஹருண் கடைபிடிப்பதற்கு பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் விதித்துள்ள மூன்று நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும்.

அமைச்சர்களின் தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு மாமன்னர் ஆற்றும் உரையின் அனைத்து விவகாரங்கள் மீதும் விரிவான அளவில் விவாதம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது இரண்டாது நிபந்தனையாகும்.

தேசிய மீட்சித் திட்டம், அவசரகாலப் பிரகடனம், அவசரகாலச் சட்டங்கள், தடுப்பூசி திட்ட அமலாக்கம், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைள், பொருளதார மீட்சி மற்றும் மக்களின் இன்னலைப் போக்கும் உத்தவாதம் ஆகிய விவகாரங்கள்  விவாதத்திற்குப்படுத்தப்பட வேண்டும் என அம்மன்றம் வலியுறுத்தியது.

மூன்றாவது நிபந்தனை, மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உத்தரவை ஏற்றுச் செயல்படுகிறாரா? அல்லது அமைச்சரவையின் உத்தரவுக்கு கீழ்படிந்து செயல்படுகிறாரா? என்பதை மக்களைவை சபாநாயகர் அவையில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதாகும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடியாது என கருதும் பட்சத்தில் மக்களைவை சபநாயகர் பதவியை டத்தோ அஜிசான் துறக்க வேண்டும் என்றும் பக்கத்தான் தலைவர் மன்றம் வலியுறுத்தியது.


Pengarang :