ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

செப்டம்பர் மாதத்திற்குள்  காஜாங் தொகுதியில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பர்

காஜாங், ஜூலை 26– காஜாங் சட்டன்றத்  தொகுதியைச் சேர்ந்த 90 விழுக்காட்டு மக்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பர்.

மத்திய அரசின் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் (பிக்) மற்றும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் (செல்வேக்ஸ்) ஆகியவற்றின் வாயிலாக இந்த இலக்கு எட்டப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இதுவரை சுமார் முப்பது விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் . இது சற்று அதிகமான எண்ணிக்கையாகும். இங்குள்ள பல தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக அமைந்தன என்றார் அவர்.

இந்த வகை தடுப்பூசிதான் வேண்டும் என தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் போக்கை கைவிடும்படியும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அனைத்து தடுப்பூசிகளும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால் தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பதை தவிர்த்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :