ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

இருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- நாடாளுமன்றம் மீண்டும் ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், ஜூலை 29- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மேலும் இரு கோவிட்-19 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா மக்களவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இக்கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அவைக்கு தலைமையேற்றிருந்த துணை சபாநாயகர்  டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் கூறினார்.

இம்மாதம் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்த பணியாளர் ஒருவருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட வேளையில் மற்றொருவர்  மீது ஆண்டிஜென் ஆர்.டி.கே. உமிழ்நீர் சோதனையில் நோய்த் தொற்று கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட அனைவரும் கோவிட்-19 சோதனைக்கு உட்பட வேண்டும் என்றும் சோதனை முடிவு தெரியும் வரை யாரும் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :