ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூர் சுகாதார இலாகாவுக்கு 7,000 சுய மதிப்பீட்டு கருவிகள்- மாநில அரசு வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 30- சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவுக்கு 7,000 கோவிட்- 19 சுய மதிப்பீட்டு கருவிகள் அடங்கிய பெட்டிகளை மாநில அரசு வழங்கியுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவும் உபகரணங்கள் அடங்கிய இந்த பெட்டிகளை மாநில சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்  சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமானிடம் ஒப்படைத்தார்.

கே.என்.95 ரக முகக் கவசங்கள், இரத்தத்தில் பிராணவாயு அளவை சோதிக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர்  சாதனம் உள்ளிட்ட கருவிகள் அந்த பெட்டியில் உள்ளதாக டாக்டர் சித்தி மரியா அறிக்கை ஒன்றில் கூறினார்.

சுகாதார அதிகாரிகள் நோயாளிகளின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆக்சிமீட்டர் காட்டும் நாடித் துடிப்பு அளவையும் உடலில் ஏற்பட்டுள்ள இதர அறிகுறிகளையும்  செலங்கா செயலியில் பதிவிட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நாடித் துடிப்பையும் இரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவையும் கணக்கிடுவதற்கு இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் உதவுகிறது. உடலில் வழக்கமான ஆக்சிஜன் அளவு 95 முதல் 99 விழுக்காடாக இருக்க வேண்டும். அதே சமயம் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 50 முதல் 90 வரை இருக்க வேண்டும்.

 


Pengarang :