HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி வாங்க 6,200 நிறுவனங்கள் ஆர்வம்

ஷா ஆலம், ஜூலை 30– செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின்  தொழில் துறைக்கான தடுப்பூசித் திட்டத்தின் வழி தடுப்பூசி கொள்முதல் செய்ய 6,200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிகளவில்  கீழ் தடுப்பூசி வாங்க பதிவு செய்துள்ளதாக வாணிகம் மற்றும் தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 134,837 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 102,089 தடுப்பூசிகள் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் 32,748 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மற்றும் செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதை மாநில அரசு இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு, தொழில் துறைக்கு இருபது லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் பத்து லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். முதலாளிகள் இந்த தடுப்பூசிகளை வாங்கி தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க இத்திட்டம் வகை செய்கிறது.

மாநில அரசு மற்றும் முதலாளிகள் இணக்கம் கண்டபடி செல்வேக்ஸ் இண்டஸ்ட்டீஸ் திட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளிக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த உண்டாகும் மொத்த செலவு 350 வெள்ளியாகும்.

 


Pengarang :