MEDIA STATEMENTSUKANKINI

தோக்கியோ ஒலிம்பிக்-  ஓட்டப்பந்தய வீராங்கனை அஸ்ரின் நபீலா முதல் சுற்றுக்கு தேர்வு

தோக்கியோ, ஜூலை 30- தோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாட்டின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீராங்கனை அஸ்ரின் நபீலா அலியாஸ் முதல் சுற்றுக்குத் தேர்வானார்.

தோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் இன்று நடைபெற்ற 100 மீட்டர் போட்டிக்கான இரண்டாவது தேர்வுச் சுற்றில் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்து 11.77 விநாடிகளில் ஓடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

திரங்கானுவைச் சேர்ந்த  21 வயதான இந்த வீராங்கனையின்   சொந்த சாதனை 11.92 விநாடிகளாகும். ஒலிம்பிக் போட்டியில் இவர் முதன் முறையாக தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் 100 மீட்டர் தொலைவை  11.76 விநாடிகளில் கடந்து ஈரானிய வீரர் ஃபர்சானா ஃபாஷிஹி முதல் இடத்தைப் பிடித்தார். குவைத்தை சேர்ந்த அல்ஷாமாரி முதாவி 11.82 விநாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகும்  முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஓட்டப்பந்தய வீராங்கனைகள் முதலாவது சுற்றுக்கு தேர்வு பெறுவர்.


Pengarang :