ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் லஞ்சான் தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்தவர்களுக்கு உணவு பொருள் விநியோகம்

பெட்டாலிங் ஜெயா, ஆக 1– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் அந்நிய நாட்டினர் உள்பட வசதி குறைந்தவர்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது புக்கிட் லஞ்சான் தொகுதி.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டத் தரப்பினர் குறுஞ் செய்தி உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரி வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார்.

கடந்த இரு மாதங்களாக வேலையில்லாத காரணத்தால் வருமானம் இன்றி தவிக்கும் அந்நிய நாட்டினரையும் நாங்கள் கைவிட விரும்பவில்லை. அவர்களுக்கும் 70 வெள்ளி முதல் 80 வெள்ளி வரையிலான உணவுப் பொருள்கள் நாங்கள் வழங்கினோம் என்றார் அவர்.

சமையல் பொருள்கள் தவிர்த்து, சில உணவகங்கள் தயார் செய்த சமைத்த உணவுகளையும் வழங்கி வருகிறோம். எங்களின் இந்த திட்டத்தின் வாயிலாக சுமார் ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள டிரோப்பிகானா கார்டன்ஸ் மால் கட்டிடத்தில் நடைபெறும் சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :