ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாளை முதல் 9 மையங்களில் நேரில் சென்று தடுப்பூசி பெறலாம்

ஷா ஆலம், ஆக 1- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் முன்பதிவு செய்யாமல் நேரடியாக சென்று தடுப்பூசி பெறுவதற்காக ஒன்பது தடுப்பூசி மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் மாநாட்டு மையம், பாங்கி அவென்யூ மாநாட்டு மையம், கிள்ளான் விண்ட்ஹம் ஹோட்டல், டேவான் துன் ரசாக், சபாக் பெர்ணம், செரண்டா சமூக மண்டபம், ஹோட்டல் மூவேன்பேக், கே.எல்.ஐ.ஏ. சிப்பாங், ஷா ஆலம் ஆகியவையே அந்த ஒன்பது தடுப்புசி மையங்களாகும்.

நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வரும் ஆகஸ்டு மாதம் 2 முதல் 4 ஆம் தேதி வரை தடுப்பூசி பெறலாம் என்று கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு கூறியது.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்க ஆகஸ்டு மாதம் 5 முதல் 22 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அக்குழு தெரிவித்தது.

நாட்டின் பிரஜைகள்  மற்றும்  சிகப்பு அடையாள அட்டைகளை கொண்ட  நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்டு 9 முதல் 11 வரையிலும் 18 வயதுக்கும் மேற்பட்ட அந்நியப் பிரஜைகள் ஆகஸ்டு 12 முதல் 22 வரையிலும் தடுப்பூசி பெற முடியும். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும்.

தடுப்பூசி பெற விரும்புவோர்  தாங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்துவ சான்றுகளை கட்ட வேண்டும்.


Pengarang :