ECONOMYHEALTHNATIONALPBT

கே.இ.டி.பி.டபள்யு.எம். பணியாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை- கிள்ளானில் குப்பைகளை அகற்றுவதில் சுணக்கம்

ஷா ஆலம், ஆக 4- கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு  உட்பட்ட 14 பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை சரி செய்வதற்கு கும்புலான் கே.இ.டி.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வெளியாட்களின் உதவியை நாடியுள்ளது.

குப்பை அகற்றும் பணியாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது  போன்ற பணிகளை மேற்கொள்ளும் காரணத்தால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தடைபட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் ஊடக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் மாஃபுஸா முகமது தர்மிடி கூறினார்.

அமான் பெர்டானா, பண்டார் புக்கிட் ராஜா, புக்கிட் காப்பார், கம்போங் பாயு பெர்டானா, கம்போங் ராஜா ஊடா, தாமான் சீ லியோங், கம்போங் பாரு பண்டமாரான், கம்போங் இடாமான், பண்டமாரான் ஜெயா, கோலக் கிள்ளான், தாமான் கோத்தா பெண்டாமார், தாமான் செலாட் கிள்ளான், தாமான் பெட்டாலிங் இண்டா, தாமான் செலாத்தான் ஆகியவையே பாதிக்கப்பட்ட பகுதிகளாகும் என்று அவர் சொன்னார்.

இருப்பினும், வெளியிலிருந்து தருவிக்கப்படும் பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் பணி வழக்கம் போல் மேற்கொள்ளப்படும். குப்பைகளை அகற்றுவது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளில் ஒன்றாகும் என்றார் அவர்.

தங்கள் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவது தொடர்பான பிரச்னைகளை எதிர்நோக்குவோர் கே.இ.டி.பி. வேஸ்ட் மேமென்ஜ்மெண்ட் நிறுவனத்தின் ஒரிட புகார் மையம் அல்லது  அந்நிறுவனத்தின் கிள்ளான் கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :