ECONOMYHEALTHNATIONALPBT

ஐந்து செல்வேக்ஸ் மையங்களில் நேரடியாக தடுப்பூசி பெற வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 4- தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் தேதி கிடைக்காதவர்கள் நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கு சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் செயல்படும் ஐந்து தடுப்பூசி மையங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டிரோப்பிகானா கார்டன் மால், பண்டார் பாரு பாங்கியிலுள்ள ஈவோ மால், புக்கிட் ஜாலில் அவுரா பிளேஸ்,  ஹோட்ட டி பல்மா ஷா ஆலம், கிளானா ஜெயா, பி.கே.என்.எஸ். விளையாட்டு மையம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தடுப்பூசி அதிகரிப்பு பணி திட்ட இயக்குநர் டாக்டர் ஓங் கியான் மிங் கூறினார்.

இத்திட்டத்தின் வாயிலாக மேலும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சமுதாயத்தை விரைந்து உருவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்கள் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை கிளானா ஜெயா, பி.கே.என்.எஸ் விளையாட்டு மையத்திலுள்ள மையத்தில் தடுப்பூசியைப் பெறலாம் என அவர் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசித் திட்டத்தை அதிகரிப்பது தொடர்பான மீடியா சிலாங்கூர் மற்றும் டிவி சிலாங்கூரின் நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பொது மக்கள் மற்றும் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் இரு தடுப்பூசித் திட்டங்களை அமல் செய்தது. மொத்தம் 25 லட்சம் தடுப்பூசிகளை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு மாநில அரசு 20 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. 

 


Pengarang :