ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று  19,819 ஆக உயர்ந்தது: சிலாங்கூரில் 8,377 தேர்வுகள்

ஷா ஆலம் ஆக, 4- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து  19,819 ஆக ஆனது. நேற்றை விட இது சுமார் 2,000 சம்பவங்கள் அதிகமாகும்.

சிலாங்கூரிலும் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு 8,377 ஆனது. கடந்த சனிக்கிழமை முதல் இம்மாநிலத்தில் நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. 

சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட தரவுகளை பார்க்கையில் சில மாநிலங்களில் நோய்த் தொற்று ஆயிரத்தை தாண்டியதை உணர முடிகிறது.

கோலாலம்பூரில் 2,467 சம்பவங்கள் பதிவான வேளையில் ஜோகூர், கெடா மற்றும் கிளந்தானில் முறையே 1,162, 1,371 மற்றும் 1,003 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- 

சபா (949), பினாங்கு (867), நெகிரி செம்பிலான் (800), பேராக் (662), பகாங் (558), சரவா (552), மலாக்கா (558), திரங்கானு(448), புத்ரா ஜெயா (46), பெர்லிஸ் (11), லபுவான் (5).

சிலாங்கூரில் 6,067 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வருமாறு-
கோலாலம்பூர்(1,536), ஜோகூர் (1,222), சபா (1,166), சரவா (411), நெகிரி செம்பிலான்(862), கெடா (1,108), பினாங்கு (667), கிளந்தான் (552), பேராக் (748), மலாக்கா (463), பகாங் (475), திரங்கானு (425), லபுவான் (7), புத்ரா ஜெயா (46), பெர்லிஸ் (9).

Pengarang :