ACTIVITIES AND ADSECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGORWANITA & KEBAJIKAN

உணவின்றி தடுமாறிய தனித்து வாழும் தாய்க்கு தக்க தருணத்தில் கைகொடுத்த செந்தோசா தொகுதி

கிள்ளான், ஆக 16- உணவுப் பொருள் தீரும் நிலையிலிருந்த தங்களுக்கு தக்க சமயத்தில் உதவி வழங்கிய சொந்தோசா தொகுதிக்கு தனித்து வாழும் தாய் ஒருவர் மனம் நெகிழ்ந்து நன்றி கூறினார்.

கையில் காசில்லாமலும் வீட்டில் உணவுப் பொருள் இல்லாமலும் தவித்த தமக்கு தொகுதி சார்பில் கிடைத்த இந்த உணவுப் பொருள் உதவி மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரான லட்சுமி ராஜசிங்கம் (வயது 45) தெரிவித்தார்.

குழந்தை பராமரிப்பாளராக இருக்கும் தமக்கு கிடைக்கும் 300 வெள்ளி மாத வருமானமாக 300 வெள்ளி கிடைப்பதாக நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான அவர் சொன்னார். 

எனது இரு பிள்ளைகள் வேலை செய்த போதிலும் அந்த வருமானம் குடும்பச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. இந்த சமயத்தில் செந்தோசா தொகுதி சேவை மையம் வாயிலாக வழங்கப்பட்ட இந்த உதவி எனது சுமையை ஓரளவு குறைந்துள்ளது. இந்த உதவிக்காக தொகுதி பொறுப்பாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், சிலாங்கூர் லப் அண்ட் கேர் சமூக நல அமைப்புடன் இணைந்து தொகுதியிலுள்ள சுமார் 400 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை நேற்று முன்தினம் வழங்கினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அரிசி, மாவு, பீகூன், மேகிமீ, முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இதனிடையே, இந்த உணவுப் பொருள்களை வழங்கி உதவிய தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய திருமதி சூரியபிரபா தேமுடு (வயது 45), இந்த உணவுப் பொருள்களுக்கு உண்டாகும் செலவுத் தொகையை மிச்சப்படுத்தி உயர்கல்விக் கூடத்தில் பயிலும் தனது இரு பிள்ளைகளின் தேவைக்கு பயன்டுத்தவுள்ளதாக சொன்னார்.

கோவிட்- 19 பெருந்தொற்று காரணமாக அச்சக பணியாளரான தாமும் பாதுகாவலரான தன் கணவரும் வேலையை இழக்கும் நிலைக்கு ஆளானதாக மூன்று பிள்ளைகளுக்கு தாயான அவர் கூறினார்.

 


Pengarang :