TOKYO, 24 Ogos — Atlet powerlifting paralimpik negara Bonnie Bunyau Gustin bersama atlet olahraga paralimpik negara Siti Nooriasah Mohamad Ariffin membawa Jalur Gemilang pada upacara pembukaan Sukan Paralimpik Tokyo 2020 di Stadium Olimpik malam ini. Seramai 22 atlit paralimpik negara terlibat pada kejohanan Sukan Paralimpik Tokyo bermula hari ini sehingga 5 September. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA TOKYO, Aug 24 — National paralympic powerlifting athlete Bonnie Bunyau Gustin together with national paralympic runner Siti Nooriasah Mohamad Ariffin carried the Jalur Gemilang at the opening ceremony of the Tokyo 2020 Paralympic Games at the Olympic Stadium tonight. A total of 22 national paralympic athletes are involved in the Tokyo Paralympic Games starting today until September 5. –fotoBERNAMA (2021) COPYRIGHTS RESERVED
ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

வியக்கத்தக்க வெற்றியுடன் தோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்தது மலேசியா

தோக்கியோ, செப்– ஜப்பானில் 12 நாட்கள் நடைபெற்று இம்மாதம் 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த தோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் (மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி) மலேசிய வியக்கத்தக்க வெற்றியை மலேசியா பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் தாங்கள் நிகழ்த்திய சாதனைகளின் வாயிலாக அவர்கள் தனித்துவமிக்கவர்கள் ஆனார்கள்.

இப்போட்டியில் மலேசியா மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற வேண்டும் என்ற இலக்கை மட்டும் அடையவில்லை. மாறாக அதையும் தாண்டி இரு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று நாட்டின் விளையாட்டுத் துறை வரலாற்றில் புதிய சகாப்த த்தைபடைத்துள்ளது.

1972 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஹெல்ட்பெர்க் நகரில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டிக்கு பிறகு மலேசியா சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்த போட்டியாக இந்த தோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி விளங்குகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியோ பாராஒலிம்பிக் போட்டியில்கூட மலேசிய மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் மட்டுமே பெற்றது.

இப்போட்டியில் கடைசி நாட்டின்  கடைசி  விளையாட்டாளராக களம் இறங்கிய தேசிய விளையாட்டாளர்  அப்துல் லத்திப் ரோம்லி, நீளம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


Pengarang :