ALAM SEKITAR & CUACAPBT

நில ஊடுருவல் மற்றும் சட்டவிரோத மேம்பாடுகள் மீதான பொது மக்களின் கண்காணிப்பு புகார்கள் வரவேற்பு- மந்திரி புசார்

ஷா ஆலம், 11 செப்டம்பர்: புக்கிட் தாபூர், அம்பாங்கில் நடக்கும் நில மேம்பாட்டுக்கும்  மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை மற்றும் அத்திட்டம் உள்ளூர் அதிகாரிகளிடம் (பிபிடி) ஒப்புதல் பெறவில்லை.

அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்வதற்கும் அமலாக்கப் பிரிவு அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“MPAJ (அம்பாங் ஜெயா நகராட்சி கவுன்சில்) மற்றும் கோம்பாக் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றின் மறுபரிசீலனைக்குப் பிறகு, நிலத்தின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கப் படவில்லை. “அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை நிறுத்த மற்றும் சம்பந்தப்பட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்ய அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்,” என்று அவர் இன்று ட்விட்டர் மூலம் கூறினார்.

ட்விட்டர் பயனரின் கேள்விக்கு பதிலளிக்க அமிருடின் இதை விளக்கினார், @lamkanahraf அந்த பகுதியில் ஏதும் நடவடிக்கைகள் அனுமதிக்கப் படாதபோது ஒரு ஒப்பந்ததாரர் எப்படி புக்கிட் தாபூருக்குச் செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ட்விட்டர் பயனர் புக்கிட் தாபூரில் எந்த வளர்ச்சியையும் அனுமதிக்கக் கூடாது என்று கூறினார். மற்ற ட்விட்டர் பயனர்களால் எழுப்பப் பட்ட அமலாக்கப் பிரச்சினை குறித்து, அமிருடின், தற்போது உள்ளூர் அமலாக்க அதிகாரிகளின் எண்ணிக்கையில் வரம்புகள் உள்ளன, ஏனெனில் பணி இப்போது  நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOP) இணங்குவதில் கவனம் செலுத்துகிறது.

இருப்பினும், அமலாக்கத்தின் அளவை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் அவர் பொதுமக்களின் புகார்களை வரவேற்றார். அமலாக்கப் பிரச்சினையை பலர் எழுப்பியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான அடிப்படையில் வரம்புகள் உள்ளன.

இப்போதுள்ள நடமாட்ட கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப SOP களுடன் இணங்குவதில் கவனம் செலுத்துகின்றன. “பொதுமக்களின் புகார்களை மாநில அரசு வரவேற்கிறது, மேலும் அமலாக்கத்தின் அளவை தொடர்ந்து அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.

 


Pengarang :