Majlis menandatangani perjanjian penajaan di antara Les’ Copaque Production dan FAS Soccer School sambil disaksikan oleh DYTM Raja Muda Selangor Tengku Amir Shah. Foto Twitter
SELANGORSUKANKINI

புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காண்பீர்! சிலாங்கூர் ராஜா மூடா வலியுறுத்து

ஷா ஆலம், செப் 15- அனைத்து விதமான விளையாட்டுகளின் வெற்றியை உறுதி செய்வதில் விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் முக்கிய பங்கை ஆற்ற வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் புகழை ஓங்கச் செய்யக்கூடிய திறன்மிக்க புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காணும் பொறுப்பு விளையாட்டு சங்கங்களின் தலைவர்களுக்கு உள்ளது என்று துங்கு அமிர் ஷா கூறினார். 

தரமிக்க விளையாட்டு துறையின் உருவாக்கத்திற்கு அடிமட்ட நிலையில் ஆட்டக்காரர்களை அடையாளம் காண்பது அவசியம் எனக் கூறிய அவர், அதன் பின்னர் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் வாயிலாக ஏற்பாட்டு ஆதரவை பெற வேண்டும் என்றார்.

நாட்டின் விளையாட்டு துறை தொடர்பில் இயங்கலை வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் எந்தவொரு விளையாட்டு துறையும் மூன்று விதமான சவால்களை எதிர்நோக்குவதாக "சேய்" எனப்படும் இளைஞர் அமைப்பின் தலைவருமான அவர் சொன்னார்.

நிபுணத்துவ வசதிகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளி, அரசியல் தலையீடு, நீடித்த மற்றும் ஆக்கபூர்வமான திட்டங்கள் ஆகியவையே அந்த மூன்று சவால்களாகும் என்றார் அவர்.

விளையாட்டு துறையில் அரசியல் தேவையில்லை என்பதால் அத்துறை சேர்ந்தவர்களின் தலையீடு அவசியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :