HEALTHMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 5 பி.பி.வி. மையங்களில் நேரில் சென்று தடுப்பூசி பெற வாய்ப்பு

புத்ரா ஜெயா, செப் 16- கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள ஐந்து தடுப்பூசி மையங்களில் மட்டுமே வருகைக்கான முன்பதிவின்றி நேரில் சென்று தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு  வழங்கப்படுகிறது.

நேற்று தொடங்கி இம்மாதம்  30 ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு பணிக்குழு கூறியது.

பாங்கி அவென்யூ கான்வென்ஷன் சென்டர், சைபர் ஜெயா மல்டிமீடியா பல்கலைக்கழகம், புக்கிட் ஜாலில் அஷியாத்தா அரேனா, கோம்பாக், கோலாலம்பூர் பிரிட்டிஷ் மலேசிய கழகம், ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையம் ஆகிய ஐந்து மையங்களில் நேரில் சென்று தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக அப்பணிக்குழு தெரிவித்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள தடுப்பூசி மையங்களில் நேரில் சென்று தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் இந்த தடுப்பூசி மையங்களில்  வளங்களை  அதிகப்படுத்தி விரைவாக பலன் தரக்கூடிய அணுகுறையை தாங்கள் கையாள்வதாக அப்பணிக்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள  உயர்கல்விக் கூட மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சம்பந்தப்பட் அந்த ஐந்து மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி பெறலாம் என்றும் அது ஆலோசனை கூறியது.


Pengarang :