ECONOMYMEDIA STATEMENTNATIONAL

லங்காவிக்கு 100 சதவீத பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் பறந்தது

கோலாலம்பூர், செப்டம்பர் 16:   இன்று காலை கோலாலம்பூரிலிருந்து லங்காவிக்கு ஏர் ஆசியாவின் முதல் விமானம் பதிவு செய்த 100 சதவிகித பயணிகளுடன் சென்று சேர்ந்தது. இது உள்நாட்டு விமானப் பயணத்தில் வலுவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

இன்று கோலாலம்பூரிலிருந்து திட்டமிடப் பட்டிருந்த ஒன்பது விமான  பயணங்களில்  முதல் விமானம் – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 2ல் இருந்து காலை 9.50 மணிக்கு ஏர்பஸ் ஏ 321 ரக விமானத்தைப் பயன்படுத்தி சேவையை மேற்கொண்டது.

கோலாலம்பூர் லங்காவிக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள (63 வார விமான பயணங்கள்) தவிர, ஏர் ஆசியா பினாங்கு (வாரத்திற்கு 14 முறை), ஜோகூர் பாரு (வாரத்திற்கு ஏழு முறை), ஈப்போ (வாரத்திற்கு மூன்று முறை) மற்றும் கோத்தா பாரு (வாரத்திற்கு மூன்று முறை) ஆகிய இடங்களிலிருந்தும் லங்காவிக்கான விமான சேவையை கொண்டுள்ளது.

ஆக மொத்தமாக, வாரத்திற்கு 90 விமான பயண சேவைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக இன்று ஒரு அறிக்கையில் அது கூறியது. ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் கூறுகையில், லங்காவி பயணத்திற்கு 200,000 இடங்கள் ஒரு வாரத்திற்குள் விற்கப்பட்டன.

“இந்த பயண இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்ய, எங்கள் குழுவினர் மற்றும் முன்னணி ஊழியர்கள் 100 சதவிகிதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, எங்கள் விருந்தினர்கள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, நாங்கள் முழுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் என்றார்.

“பல மாத தயார் நிலைக்கு பிறகு, தொழில் மீட்சிப் பெறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய எங்கள் செயல்பாடுகளை அதிகரிக்கத் தயாராக உள்ளோம்.

நாட்டில் “தடுப்பூசி விகிதங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப நாடு முழுவதும் மேலும் பயணக் குமிழ்கள் விரைவில் உருவாக்கப்படும், அப்பொழுது இப் பிராந்தியம் முழுவதும் பயணிக்க பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்  என்று அவர் கூறினார்.


Pengarang :