ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

நாட்டில் 76.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 17- நாட்டு மக்கள் தொகையில் 5
76.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரத்து 545 பேர்  இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 17லட்சத்து 83 ஆயிரத்து 871 பேர் அல்லது 92.7 விழுக்காட்டினர் குறைந்தது  ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர். ஒரு முறை மட்டுமே செல்லுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசியை பெற்றவர்களும் இதில் அடங்குவர்.

கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் இவ்விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

நேற்று நாடு முழுவதும் 202,298  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது

Pengarang :