ECONOMYHEALTHPBT

ஷா ஆலம் செக்சன் 7 அடுக்குமாடி குடியிருப்பில் நடமாடும் செல்வாக்ஸ் தடுப்பூசி சேவையை மந்திரி புசார் பார்வையிட்டார்.

ஷா ஆலம், 19 செப்டம்பர்: டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர் தடுப்பூசி (செல்வாக்ஸ்) திட்டத்தை பார்வையிட , சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) அபார்ட்மெண்ட், செக்சன் 7 க்கு இன்று  வருகைப்புரிந்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் வருகையுடன் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சாமாட், கோத்தா அங்கரிக் மாநில சட்டமன்ற உறுப்பினர் நிஜ்வான் ஹலிமி மற்றும் ஷா ஆலம் மாநகர சபை (MBSA) மேயர் டத்தோ ஸமானி அஹ்மத் மன்சோர் ஆகியோர் உடன் சென்றனர்.

குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொபைல் தடுப்பூசி மையத்தில் (PPV) ஒவ்வொரு நிலையத்தையும் பார்வையிட அவர் காலை 10.30 மணியளவில் வந்தார்.காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 300 முதல் 350 குடியிருப்பாளர்கள் முதல் தடுப்பூசி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக  அமிருடின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

“மொபைல் பிபிவி திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட 200 குடியிருப்பாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர், அவர்களில் 70 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள். “தடுப்பூசி போடப்படாத பலர் இன்னும் சமுதாயத்தில் இருப்பதால் தடுப்பூசி செலுத்த தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. அதனால்தான் அதிகாரப்பூர்வ விகிதம் 80 முதல் 90 சதவிகிதத்தை எட்டினாலும் (மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்) ஆனால் சிலர் பதிவு செய்யவில்லை, ”என்று அவர் கூறினார்.

ஷா ஆலம் தவிர, முன் பதிவின்றி தடுப்பூசி செலுத்தும் செல்வாக்ஸ் திட்டம் இன்று (MPP) zon 4 மாநகர பொது மண்டபத்திலும், USJ 1, சுபாங் ஜெயாவில் தொடர்கிறது. சிலாங்கூரில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்கள் உட்பட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வெக்ஸ் குழு வருகையளிக்கிறது என்றார்.

கடந்த வாரம், அதே திட்டம் பண்டர் பாரு கிள்ளான், பத்துதீகா, தஞ்சோங் சிப்பாட், கோம்பாக் செத்தியா, புக்கிட் அந்தரபங்சா, பத்தாங்காளி, தெரத்தாய், டெங்கில் மற்றும் கம்பொங் துங்கு உள்ளிட்ட 11 மாநில சட்டமன்றங்களில் (DUN) வெற்றிகரமாக செயல் படுத்தப் பட்டது.

 


Pengarang :