ECONOMYNATIONALSELANGOR

கோல சிலாங்கூரில் திடீர் வெள்ளம்: 68 குடும்பங்கள் பாதிப்பு

ஷா ஆலம், செப் 22- கோல சிலாங்கூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை பெய்த அடைமழையில் பெஸ்தாரி ஜெயா, ஜெராம், கோல சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இவ்வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 68 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் ரந்தாவ் பாஞ்சாங் தேசிய பள்ளி, பாரிட் மஹாங் தேசிய பள்ளி மற்றும் பாசாங்கான் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்ட  தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் ரந்தாவ் பாஞ்சாங், கம்போங் பாரிட் மஹாங், கம்போங் தஞ்சோங் சியாம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கடும் மழை காரணமாக கோல சிலாங்கூர் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் நுழைந்திருக்கக்கூடும் என நம்பப்படுவதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா ஜூல்கிப்ளி கூறினார்.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை இடைவிடாமல் பெய்த மழை காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர் பெருக்கெடுத்ததாக கோல சிலாங்கூர் மாவட்ட பேரிடர் நிர்வாக செயலகத்தின் லெப்டினன் மைய்சுரா சுராடி கூறினார்.





Pengarang :