ECONOMYSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா உதவி

ஷா ஆலம், செப் 24– வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுக் கூடைகள் மற்றும் ரொக்கத் தொகை விரைவில் வழங்கப்படும்.

கம்போங் தஞ்சோங் சியாமிலுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த  26 பேர் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா ஆரம்ப பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

பாசாங்கான் ஆரம்ப பள்ளியில் தங்கியுள்ளவர்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்கி விட்டோம். அப்துல் அஜிஸ் ஷா பள்ளியில் தங்கியுள்ளவர்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளதால் பாசாங்கான் ஆரம்ப பள்ளியில் 16 குடும்பங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு அப்துல் அஜிஸ் ஷா பள்ளியில் இடம் வழங்கப்பட்டது என்றார் அவர்.

கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் காரணமாக ஒரு வகுப்பறையில் இரு குடும்பங்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரண மையங்களில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இம்மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட அடை மழை காரணமாக கம்போங் தஞ்சோங் சியாம் தவிர்த்து கம் போங் ரந்தாவ் பாஞ்சாங், கம்போங் பாரிட் மஹாங் மற்றும் ஜெராம் ஆகிய பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

 


Pengarang :